3 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... பாகிஸ்தானில் பரபரப்பு!

 
தலிபான் பயங்கரவாதிகள்


 
பாகிஸ்தானில்  வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், 3 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மர்வாத் மாவட்டத்திலுள்ள ஹுராமா கிராமத்தில், இன்று ஜூலை 4ம் தேதி  பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தலிபான் பயங்கரவாதிகள்
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில், தலிபான் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த வசீமுல்லா (எ) உமர் கத்தாப், குத்ரத்துல்லா (அ) அபுபக்கர் மற்றும் ஹிஜ்ரத்துல்லா என்பது தெரியவந்துள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள்

இத்துடன், அந்த 3 பயங்கரவாதிகளும் வெடிகுண்டு தாக்குதலில் 3 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது அவர்களது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?