3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... ஜம்மு காஷ்மீரில் தொடர் பதற்ற நிலை!
ஜம்மு-காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் கந்தோ, பதேர்வா பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் தோடா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்முவின் காவல்துறை அதிகாரி ஆனந்த் ஜெயின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ, பதேர்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும், ராணுவ வீரர்களும் இணைந்து வியாழக்கிழமை காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்திக்கொண்டே தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் நுழைந்தபோது, அவர்கள் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து 2 எம்-4 மற்றும் ஒரு ஏகே-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதிகள் தங்குவதற்கு வீடு கொடுத்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயின் தெரிவித்தார். அமர்நாத் யாத்திரைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும், பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று கன்டோ, பதேர்வா செக்டார் பகுதியில் நடந்து வரும் தேடுதல் வேட்டையில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
