ஒரே பைக்கில் 3 இளம்பெண்கள்... பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான ரம்யா... வைரலாகும் சிசிடிவி வீடியோ!

 
ரம்யா

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஒரே பைக்கில் மூன்று இளம்பெண்கள் சென்று கொண்டிருந்த நிலையில், தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் மோதி, சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியானது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா, தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தந்தைக்கு மதிய சாப்பாடு கொடுத்து விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி, அருகே வந்து கொண்டிருந்த மினி பேருந்தின் சக்கரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சலோ ரம்யா மீது மினி பேருந்தின் சக்கரங்கள் ஏறி, இறங்கியது. விபத்து நடைப்பெற்ற அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே எப்போதும் பொதுமக்கள் அதிகளவில் இருப்பார்கள். 

அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த ரம்யாவை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பரிதாபமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே ரம்யா உயிரிழந்தார். இந்நிலையில் ரம்யா விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கும் நெஞ்சை பதற வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

காவல் துறையினர் மினி பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியான சிசிடிவி வீடியோவில் ரம்யா, தனது இரு தோழிகளுடன் மூவருமாக சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web