1200 போதை மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கிய 3 இளைஞர்கள்... பரபரப்பு வாக்குமூலம்!

 
1200 போதை மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கிய 3 இளைஞர்கள்... பரபரப்பு வாக்குமூலம்! 

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் போலியான முகவரி, செல்போன் எண் கொடுத்து, வலி நிவாரணி மாத்திரைகளை கூரியர் மூலம் ஆர்டர் செய்து வாங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இம்மாத்திரைகள் அந்தியூர், பவானி மற்றும் சித்தோடு பகுதியில் கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்களை குறி வைத்து போதைக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கைது

அதன்படி கூரியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து இரு பார்சல்கள் வந்தன. ரகசியமாக கூரியர் அலுவலகத்தை போலீசார் கண்காணித்ததில் கூரியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞர் மும்பையிலிருந்து வந்த பார்சலை பெற்றுச் செல்ல முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதே போல் மற்றோரு பார்சலை வாங்க வந்த 2 இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இந்த விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக வாங்கியது பவானி, லட்சுமி நகர், காலிங்கராயன்பாளையம், வாய்க்கால் வீதியைச் சேர்ந்த ஹமீது மகன் தாமு (எ) தாமோதரன் (24), அந்தியூர், தவிட்டுப்பாளையம், வேங்கையன் வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ் (25), பவானியை அடுத்த பருவாச்சி, டீச்சர்ஸ் காலனியில் வசிக்கும், மதுரை மாவட்டம், கே.புதூர், அல் அமீன் நகரைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அப்துல் மாஷீத் (27) என்பது தெரியவந்தது.இவர்கள் 1200 மாத்திரைகளை விற்பனைக்காக ஆர்டர் செய்து வாங்கியிருந்தனர். இதனை பறிமுதல் செய்து இவர்களை கைது செய்த லீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?