அதிர்ச்சி... மத்திய அமெரிக்காவில் கனமழைக்கு 30 பேர் உயிரிழப்பு; 11,000 பேர் வெளியேற்றம்!

 
அமெரிக்கா
 

மத்திய அமெரிக்காவில் பெய்து வரும் கனமழையால்  30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.புயல் மற்றும் கனமழையைத் தொடர்ந்து மத்திய அமெரிக்காவில் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து  வீடுகள் மூழ்கியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு அந்த பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா
சால்வடோர் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், இதுவரை 6 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும்  3,000 க்கும் மேற்பட்டோர் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளதாகவும், சால்வடோர் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 11,000 பேர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மெக்சிகோவில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகளிலும், மேலும் உள்நாட்டிலும் பெருமழை பெய்யும் என்றும், மின்னல், பலத்த காற்று, சாத்தியமான ஆலங்கட்டி மழை மற்றும் ஆறுகளைச் சுற்றி வெள்ளம் வரும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

அமெரிக்கா
மெக்சிகோவின் கொனகுவா நீர் ஆணையம் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் மற்றும் வளைகுடா மற்றும் கரீபியன் கடற்கரைகளைச் சுற்றி 3 மீட்டர் வரை அலைகள் வீசும் என்று எச்சரித்துள்ளது. பசிபிக் பகுதியில் சமமான வலுவான காற்று, சாத்தியமான சூறாவளியை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!