30 டன் கான்கிரீட் வீடு இடமாற்றம்.. மும்முரமான பணியில் கட்டிட பணியாளர்கள்!
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தென்றல் நகர் பகுதியில் சுதாகர் என்பவர் 1500 சதுர அடியில் ரூ.22 லட்சத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் வீட்டை கட்டியுள்ளார். இந்த நிலையில், அவருடைய வீடு தாழ்வான பகுதியில் உள்ளதால் வீட்டை இடமாற்றம் செய்ய நினைத்த சுதாகர், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தாரிடம் அனுகியுள்ளார்.

அவர்கள், வந்து வீட்டை இட மாற்றும் செய்யும் பணியை மேற்கொண்டு, 145 ஹைட்ராலிக் ஜாக்கிகள் கொண்டு 30 டன் வீட்டை 5 அடிக்கு உயர்த்தி, பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்திவாரத்திற்கு நகர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு 10-ற்கும் மேற்பட்ட தொழிலாளர் பணியில் ஈடுபட்டு வருகிறனர். இடமாற்றம் செய்வதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
