300 மூட்டை அரிசி.. 200 ஆடுகள்.. 20,000 ஆண்களுடன் களைகட்டிய கறி விருந்து திருவிழா!

 
கறி விருந்து

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோவில் திருவிழாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறி விருந்து  விமரிசையாக நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது கருத்தலக்கப்பட்டி புதூர் வடகாட்டான் கருப்பசாமி கோவில். பலநூறு ஆண்டுகளாக இக்கோயிலில் அனைத்து ஆண்களும் கலந்து கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் பெண்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கறி விருந்து விழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பங்கேற்க அனுமதி இல்லை.

இக்கோவில் பொருட்கள் எதையும்  வெளியே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் கறி விருந்து  திருவிழாவின் போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆடு, அரிசி, காய்கறிகள் போன்றவற்றை நேர்த்திக்கடன் செலுத்தி கோயிலுக்கு வழங்குவர். இந்த முப்பெரும் நிகழ்வு இந்த ஆண்டு மே 28 செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வடகாட்டான் கருப்புசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வந்தது. 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 300 மூட்டை அரிசியில் சாதம் தயார் செய்தனர்.

இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த 20,000க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக சாதம் மற்றும் மட்டன் குழம்புடன் பரிமாறப்பட்டது. இன்றைய கறி விருந்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், நத்தம், செந்துறை, சாணார்பட்டி, குட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும் கலந்து கொண்டனர். மேலும், கோவிலில் செய்யப்படும் ஆட்டிறைச்சி, சாதம் போன்றவற்றில் மிச்சம் இருக்கும் பொருட்களை குழி தோண்டி புதைப்பது வழக்கம்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web