300 பள்ளத்தில் பாய்ந்த பேருந்து... 36 பேர் பலி... 19பேர் படுகாயம்...!!

 
பேருந்து விபத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் படோடே-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி 300 அடி கிடுகிடு பள்ளத்தில் பயணிகளுடன் கவிழ்ந்தது.  இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இதில்   6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

விபத்து

இதனால் ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.  பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஆகியோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு   தலா ரூ50,000 நிவாரண உதவியும் உயர்தர சிகிச்சையும்  வழங்கப்படும் என  தமது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

ஆம்புலன்ஸ்

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் 36 பேர் பலியான சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.  பேருந்து விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  அனுதாபங்களை  தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web