மூணே வருஷத்துல 300 சதவிகித வளர்ச்சி.. ஷேர்களைத் திரும்ப பெற்று டிவிடெண்ட் தருகிறது!

 
வெல்ஸ்பன் தொழிற்சாலை

வெல்ஸ்பன் இந்தியா பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கிய மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும், குறிப்பாக கொரோனோவிற்குப் பிறகு என்று சொல்லலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் 300 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்த இந்த ஜவுளிப் பங்குகள் ஒவ்வொன்றும் ரூபாய் 21 முதல் ரூபாய் 88 வரை உயர்ந்துள்ளது. ஒரு நீண்டகால முதலீட்டாளருக்கு, இந்த செய்தி அவர்களை பெரிய அளவில் ஈர்க்கக்கூடும். 10 சதவிகித  ஈவுத்தொகை மற்றும் பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதால், ஜவுளிப் பங்கு அதன் பங்குதாரர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது.

வெல்ஸ்பன்

பங்குகளை திரும்பப் பெறுவதற்கான பதிவு தேதியாக 10 மே 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் வாங்கும் விலையாக ஒரு பங்கிற்கு ரூபாய் 120 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வெள்ளியன்று வர்த்தகமான தொகையைவிட சுமார் 36 சதவீதம் அதிகம் (ஒவ்வொன்றும் ரூபாய் 87.64) பங்குகளை திரும்ப வாங்குவதாக தெரிவித்துள்ளது. "ஏப்ரல் 27, 2023 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், 16,250,000 (ஒரு கோடியே அறுபத்தி இரண்டு இலட்சம் ஐம்பதாயிரம்) முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளை வாங்குவதற்கான பைபேக் (BUY BACK)திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தலா  ஒரு ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை நிறுவனம் ரூபாய் 120க்கு வாங்குகிறது. 

Welspun India தனது பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை அறிவித்துள்ளது, "ஏப்ரல் 24, 2023 தேதியிட்ட எங்கள் அறிவிப்பின் தொடர்ச்சியாக, ஏப்ரல் 27, 2023 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அவர்களின் கூட்டத்தில், 0.10 பைசாவை ஈவுத்தொகையாக பரிந்துரைத்துள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான ஈக்விட்டி பங்குகளில் 10 சதவிகிதமாகும் இதற்காக ஜூன் 30, 2023 அன்று புத்தகம் மூடப்படும். எனவும் தெரிவித்துள்ளது.

வெல்ஸ்பன்

இந்நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் 2023 காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 140 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 125.4 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபமான ரூபாய் 52.2 கோடிக்கு எதிரானது. எவ்வாறாயினும், நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் முந்தைய ஆண்டை விட ரூபாய் 2,227 கோடியிலிருந்து 2.3 சதவீதம் குறைந்து ரூபாய் 2,154 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web