300 டன் குப்பைகள்...விடிய விடிய பணியாற்றிய 19,600 துப்புரவு பணியாளர்கள்!!

 
குப்பை

தமிழகம் முழுவதும் நவம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடி தீர்க்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் புத்தாடை பட்டாசுகள் இனிப்புக்கள் பலகாரங்கள் என அதகளப்படுத்திவிட்டனர்.  குறிப்பாக சென்னையில் மட்டும் மக்கள் பொதுமக்களின் பட்டாசு கழிவுகளால் தெருக்களில் குப்பைகள் நிரம்பி வழிந்தன.  இதனை சுத்தம் செய்யும் பொருட்டு  இரவு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் விடாமல் பணி செய்து 300 டன் குப்பையை அகற்றியுள்ளனர்.
குப்பை


இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   நேற்று மாலை தொடங்கிய சுத்திகரிப்பு பணிகள் இன்னும் நடைபெற்று  வருகின்றன. திரும்பும் திசையெங்கும் பட்டாசுக்கழிவுகள் தான்.   மாநகராட்சி கணக்குப்படி 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.சேகரித்த குப்பைகளை தரம் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

குப்பை

இரவு முழுவதும் பணி செய்த தூய்மைப் பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.  அப்போது அவர் “ சென்னையில் நேற்று இரவு வரை, சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக மட்டும் 19,600 தூய்மைப் பணியாளர்கள் இரவு முழுக்க பணிகளை செய்து வருகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web