வைகை அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

 
வைகை

தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. நீர் ஆதாரங்களில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை சிறிதும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய வைகை அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிடுகிடுவென குறையும் அணையின் நீர்மட்டம்! வைகை, முல்லைப்பெரியாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர் இருப்பு எவ்வளவு?

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக நீர் திறக்கப்படுகிறது. இதனையடுத்து  கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படும் நீரை வீணாக்காமல் சேமித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.  இன்று முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

வைகை அணை திறப்பு.. 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!
நாளை இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3ம் கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கைவ் விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web