வைகையில் 3000 கன அடி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
இன்று முதல் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்  வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனத்திற்காக முதற்கட்டமாக வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மே 11ம் தேதி சனிக்கிழமை நேற்று முன்தினம் இந்த தண்ணீர் மதுரை வந்தடைந்தது. தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழையால் வைகையாற்றின்  பகுதிகளுக்கு அதிக அளவில் நீர்வரத்து காணப்படுகிறது.

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..


இதனால், மதுரை வைகை ஆற்றில் 2வது நாளாக இரு கரைகளையும் அடைத்துக்கொண்டு  தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் எதிரொலியாக நகரில் ஆற்றுப்பகுதியின் அருகே ஆங்காங்கே உள்ள இணைப்புச்சாலைகளில் தண்ணீர் தேங்கியும் வருகிறது. இதனையடுத்து  வைகை கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெள்ள அபாய எச்சாிக்கை விடுத்துள்ளார். அதன்படி வைகை கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web