கெத்து காட்டும் கேரளா... சம்மர் லீவும் விடலை... அரபு நாடுகளில் இருந்து ஓட்டு போட பறந்து வந்த 30,000 பேர்!

 
தேர்தல்


இன்று கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக  தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் வாக்களிப்பதை மட்டுமே பிரதான கடமையாக நினைத்து, அரபுநாடுகளில் இருந்து சுமார் 30,000 பேர் தங்களது சொந்த பூமியான கேரளத்திற்கு திரும்பியுள்ளனர்.அரபு நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி புரிந்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிபவர்களில் கேரள மக்களே அதிகளவில் முன்னிலை வகிக்கின்றனர்.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

இதுவரை கேரளத்தில் நடைப்பெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்து வாக்களித்து விட்டு, தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றிய திருப்தியோடு மீண்டும் வெளிநாடு செல்கின்றனர். அதே போன்று இம்முறை மக்களவைத் தேர்தலிலும் வாக்களிப்பதற்காக அரபு நாடுகளில் இருந்து 30,000க்கும் மேற்பட்டோர் கேரளா திரும்பியுள்ளது நாடு முழுவதும் கேரள மக்களின் ஒற்றுமை பாராட்டைப் பெற்று வருகிறது. 

தேர்தல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கடந்த சில வாரங்களாக அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இத்தனைக்கும் அரபு நாடுகளில் இன்னும் கோடை விடுமுறை துவங்கவில்லை. பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. பொதுவாக ஜூலை மாதத்தில் தான் அரபு நாடுகளில் கோடை விடுமுறை துவங்கும். விடுமுறை  காலங்களும் துவங்காத நிலையில், வாக்களிப்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு சொந்த ஊருக்கு வந்திருக்கும் மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!