மழை வெள்ளத்தால் 31 பேர் பலி... பீதியில் மக்கள்!!

 
வெள்ளம்

ஆப்பிரிக்கா நாடுகளில்  வறட்சிக்குப் பெயர் பெற்ற நாடு சோமாலியா. இந்த நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் பெய்த பெருமழை காரணமாக நேரிட்ட வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இங்கு அக்டோபரில் தொடங்கிய இந்த மழை காரணமாக 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நாட்டில் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா

இந்த தகவலை அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் தாவூத் ஆவிஸ் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக தெற்கு சோமாலியாவில் கெடோ பகுதியில்தான் பெரும் பாதிப்பு நேரிட்டுள்ளதாக   குறிப்பிட்டார்.சோமாலியாவில் நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் இத்தகைய பெரு மழை பெய்யும். இந்த மழை - வெள்ளத்தைச் சமாளிக்கத்தான் முடியுமே தவிர  தடுக்க முடியாது என மனிதநேய உதவிகளுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

சோமாலியா


ஐநா சபை சோமாலியாவின் வெள்ள நிவாரண மீட்பு பணிகளுக்காக   25 மில்லியன் அமெரிக்க டாலர்களை  அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 208 கோடியை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் சோமாலியாவுக்கு அருகேயுள்ள கென்யா நாடும் கடும் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இங்கு  சுமார் 15 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்   கென்ய ரெட்கிராஸ் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web