பெங்களூருவில் 6 மணி நேரத்தில் 345மிமீ.. கொட்டித் தீர்த்த பெருமழை... மிதக்கும் சாலைகள்.. தத்தளிக்கும் வாகனங்கள்!

 
மழை

 கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  மே 10ம் தேதி இரவு கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த பெருமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.  வெறும் 6 மணி நேர இடைவெளியில் 345 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது 34.5 சென்டிமீட்டர் என்று சொல்லலாம்.

இடி மின்னல் மழை

இதில் டாப் 5 இடங்கள் என்று பார்த்தால் பெங்களூரு அர்பனில் கிதானஹள்ளி 129 மி.மீ, கடபகெரே 112.5 மி.மீ, துமகுருவில் உள்ள ஹெரூர் 105 மி.மீ, சென்னானஹள்ளி 104 மி.மீ, பெலவதா 101 மி.மீ என மழை பெய்துள்ளது.  கர்நாடகாவை பொறுத்தவரை  மொத்தம் 5 பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அவற்றில் 3 இடங்கள் பெங்களூருவில் உள்ளன.   ஒட்டுமொத்த மழைப்பொழிவு 345 மி.மீ ஆகும்.

மழை

இவ்வாறு திடீர் கனமழைக்கு தென்னிந்திய தீபகற்பத்தை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே காரணம்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பார்த்தால் அதிகபட்சமாக ஆர்.ஆர்.நகரில் 62.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதுவே நகரின் மையப் பகுதியில் 1.6 மிமீ. மட்டுமே மழை பெய்துள்ளது.அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரத்தை எடுத்து பார்த்தால், பெங்களூரு மற்றும் அதனை ஒட்டியுள்ள கோலார், சிக்கபல்லபுரா, துமகுரு, ராமநகரா  பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web