இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 350 சலவைக்கடைகள்.. ரூ84 லட்சம் வேலையை உதறி சாதனை படைத்த இளைஞர்!
பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் அனுரப் சின்ஹா. இவர் 12ஆம் வகுப்பு முடித்ததும் இவருக்கு ஐஐடியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்து வெளிநாட்டில் வேலை தேடி சென்றுவிட்டார். இந்நிலையில் 2015ல் இவருக்கு திருமணமும் நடைபெற்று முடிந்துவிட்டது. இவர் பல எண்ணிக்கையில் ஹோட்டல்களையும் நடத்தி வந்தார். இதனையடுத்து இவரும் இவருடைய மனைவியும் ஹோட்டல்களுக்கான சலவை தொழிலை முன்னெடுத்து செய்ய முடிவு செய்தனர்.

அத்துடன் தரமான சேவை வழங்கவும் உறுதியளித்தனர். இந்நிலையில் ஆண்டுக்கு 84 லட்சம் சம்பளம் வாங்கி வந்த அனுரப் 2014-ம் வருடம் அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு 20 லட்சம் முதலீட்டில் 2017 ஜனவரி மாதம் யூ கிலீன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இதனுடைய மதிப்பு ரூ170 கோடி. இந்தியா முழுக்க 104 நகரங்களில் 350 UClean கடைகளை திறந்துள்ளனர். மட்டுமின்றி, வங்கதேசம், நேபாளத்திலும் கடைகளை திறந்துள்ளார்.
தற்போது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக்க முயற்சித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்து வருகிறார். இவரது இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
