பிளஸ் 1 மாணவிக்கு கூல்டிரிங்ஸில் மதுபானம் கலந்து கொடுத்த 36 வயது நபர்.. அதிர்ச்சி பின்னணி!
நேற்று மாலை சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் 16 வயது பிளஸ் 1 மாணவி மயங்கி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கி கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவி மது போதையில் இருந்துள்ளார். அவரால் உட்காரக்கூட முடியவில்லை. இதனால் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி மது ஊற்றியவர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஷ்வினி, அம்மாப்பேட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அச்சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர் அதிக போதையில் இருந்ததால் போலீசாரால் விசாரிக்க முடியவில்லை. அதேநேரம், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், அச்சிறுமியை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான படத்தை வைத்து விசாரித்தனர். ராமன்குட்டையை சேர்ந்த கோவிந்தசாமி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அச்சிறுமி அதே பகுதியில் உள்ள மற்றொரு இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இருவருக்கும் இடையே நட்பு வளர்ந்துள்ளது. கோவிந்தசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியை கோவிந்தசாமி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் குளிர்பானத்தில் மதுவை ஊற்றி குடிக்க வைத்தார். சிறுமியும் அதை குடித்துள்ளார். சிறுமியாக இருந்ததால், போதை உடனடியாக ஆக்கிரமித்தது. இதை பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றபோது, சிறுமிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பயந்துபோன அவர், உடனடியாக சிறுமியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ரோட்டோரத்தில் இறக்கிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே சமயம் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வந்த பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
