உஷார் மக்களே... பேஸ்புக் மூலம் ரூ.38 லட்சம் மோசடி!

 
பேஸ் புக்
 தூத்துக்குடி மாவட்டத்தில் பேஸ்புக்கில் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அதன்மூலம் கிப்ட் பார்சல் அனுப்புவதாக கூறி ரூபாய் 38 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பேஸ்புக்கில் Nicholas Andrewis Morris என்ற பெயருடைய அடையாளம் தெரியாத மர்ம நபர் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து பின்னர் மேற்படி பெண்ணும் அந்த நபரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அந்த நபர் மேற்படி பெண்ணுக்கு கிப்ட் பார்சல் ஒன்றை அனுப்புவதாக கூறியுள்ளார். 

அம்மாடியோவ்! 300 கோடி போலி கணக்குகள்! விழிபிதுங்கும் ஃபேஸ்புக் !?
பின்னர் ஓரிரு நாட்களில் மேற்படி பெண்ணிடம் அங்கீதா என்ற பெயரில் சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறிய மற்றொரு நபர் 70,000 பவுண்ட்ஸ் பணம், நகை மற்றும் ஐ போன் ஆகியவை பார்சலில் தங்கள் பெயருக்கு வந்துள்ளதாகவும் அந்தப் பார்சலை பெறுவதற்கு பிராஸசிங் கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிட்ட வகைகளுக்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறியதன் பேரில் மேற்படி பெண் அதனை நம்பி பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூபாய் 38,19,300/- பணத்தை பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மூலமும் மற்றும் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி பெண் இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் பதிவு செய்துள்ளார்.


மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் முத்து (32) என்பவர் மேற்படி பாதிக்கபட்ட  பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஃபேஸ்புக் மூலம் பணமோசடி!! அதிர வைக்கும் வாக்குமூலம்!!நெட்டிசன்களே உஷாரா இருங்க!!
இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு நேற்று சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து மோசடி முத்துவை கைது செய்து தூத்துக்குடி அழைத்து சென்று, இன்று தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web