39 பேர் பலி; 360 பேர் படுகாயம்... கென்யாவில் வெடித்தது கலவரம்... அரசுக்கெதிராக மக்கள் போராட்டம்!
Breaking News
— Hira Afridi (@HiraAfridi_) June 26, 2024
FLASH: Protestors SHOT DEAD by Kenyan police during a TAX REVOLT.
The revolt was spurred by Kenya's latest IMF DEAL.
As Harvard Prof. Robert Barro puts it, "THE IMF DOESN'T PUT OUT FIRES, IT STARTS THEM." pic.twitter.com/VCNuJ55EVp
திடீரென அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த போலீஸார், பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இந்த நிலையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (KNCHR) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ளது. கென்யா நாடாளுமன்றத்தில் இயற்றப்பட இருந்த புதிய வரி உயர்வு தொடர்பான சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை வெளியிட்டது.
அதில் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் உயிரிழந்ததாகவும் 361 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதே காலக்கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 32 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!