39 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழக அரசு தடாலடி உத்தரவு!

 
திருச்சி போலீசார்

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன்  ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வும், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வும், ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக அபய் குமார் சிங்குக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. வன்னியபெருமாளுக்கும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு  அதே இடத்தில் பணியை தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி போலீசார்

மேலும் தமிழக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை செய்திருக்கிறார்கள், திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம் செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி தெற்கு மாநகர துணை ஆணையராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் அதேபோல திருநெல்வேலி இணை ஆணையராக பணியாற்றிய சீனிவாசன் சென்னை தலைமையிடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

திருச்சி போலீசார்

உள்துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் புதியதாக பொறுப்பேற்ற பின்னர் வெளியிட்டுள்ள முதல் உத்தரவில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த நிலையில் தற்பொழுது ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web