நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி... ஆண் குழந்தைப் பிறந்துள்ளதாக அறிவிப்பு!

 
சிவகார்த்திகேயன்

 சமீபத்தில்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அந்த வீடியோவில் ஆர்த்தி நிறைமாத கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.  ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும் , குகன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 3வதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது.


இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களுக்கு நேற்று ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அதே அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என வேண்டுகிறோம். நன்றி” என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web