ஒரே வாரத்தில் 3 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே வாரத்தில் 3வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் இது குறிப்பிடத்தக்கது. இதன்படி, டெல்லியில் கடந்த 11 நாட்களில் 6 முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காலை 5.02 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதைனையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் போலீஸார், நாய்ப் படைகள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த பள்ளியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் துவாரகாவில் உள்ள 5 பள்ளிகளுக்கும், மற்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் இதே போன்ற இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!