3 வது முறையாக டிரம்ப் - பைடன் நேருக்கு நேர் விவாதம்!

 
பைடன் டிரம்ப்

 இந்தியாவில் தேர்தல் முடிவடைந்து 3 வது முறையாக மோடி பதவியேற்று உள்ளார். அந்த வரிசையில் அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில்  அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.  அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலின் முக்கிய அம்சங்களில் ஒன்று  வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது அந்நாட்டு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. 

டிரம்ப் பைடன்

ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கின்றனர். அப்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு வாக்காளர்களிடம் ஆதரவு கேட்பார்கள். தங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடுவார்கள்  குறிப்பாக, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் தொடர்பான விவகாரங்கள், ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் ஆகியவை  விவாதத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நேருக்கு நேர்  விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் உண்டு. அத்துடன் இந்த விவாதத்தை நேரில் காண  பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. டிரம்ப்-பைடன் இருவரும் அதிபர் வேட்பாளர்களாக நேருக்கு நேர் விவாதம் செய்வது இது 3வது முறை ஆகும். இதற்கு முன்பு, 2020 தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பைடன் டிரம்ப்


இந்த விவாதத்தில் இரு வேட்பாளர்களும் அதிக உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதாக விவாத நிகழ்ச்சியின் இயக்குனர் ஆரோன் கால் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்ததில் இருந்து விவாதம் செய்யவில்லை. தற்போதைய விவாதத்தில் அவர்களின் வழக்கமான விவாத பாணிகளுக்கு திரும்ப சிறிது நேரமாகலாம் எனவும்  இயக்குனர் ஆரோன் கால் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!