4 ராணுவ வீரர்கள் வெள்ளம் விபத்தில் சிக்கி பலி!

 
ராணுவ வீரர்கள்
 

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில்  துர்புக் நகரில் இருந்து சோங்டாஷ் பகுதியை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பெரிய பாறை ஒன்று உருண்டு வந்த நிலையில் அந்த வாகனம்  அவர்களுடைய வாகனத்தின் மேலே  விழுந்துவிட்டது.  இந்த சம்பவத்தில், ராணுவ வாகனம் நொறுங்கியது. 

இந்திய ராணுவ வீரர்கள்

இதில், லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மற்றும் மற்றொரு வீரரான தல்ஜீத் சிங் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுதவிர, மேஜர் மயங்க் சுபம், மேஜர் அமித் தீட்சித் மற்றும் கேப்டன் கவுரவ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.  

சிக்கிமில் கனமழை... நிலச்சரிவு..  3 ராணுவ வீரர்கள் பலி; 6 பேர் மாயம்!

அவர்கள் மீட்கப்பட்டு, லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதேபோன்று காஷ்மீரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ஆசிரியர்களான ஜக்தேவ் சிங் தாக்குர் மற்றும் சஞ்சய் சர்மா இருவரும் பலியானார்கள். கனமழை தொடர்ச்சியாக, பஹல்காம், பல்தல் முகாம்களில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இதுவரை அமர்நாத் புனித குகையில் 3.93 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?