24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலைகள்... தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் நேற்று இரவு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த முகமது யாஷிக்கை வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதே போன்று நேற்று இரவு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாஜக கட்சியின் பிரமுகரான செல்வகுமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக இருக்கும் உஷாராணியின் கணவர் ஜாக்சன் என்பவரும் 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
மேலும் இதனைத் தொடர்ந்து இன்று காலை கடலூரில் அதிமுக கட்சியின் வார்டு செயலாளராக இருக்கும் பத்மநாதனும் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!