பயங்கர விபத்து... பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதிய கார்... ஆடல் பாடல் குழுவினர் 4 பேர் பலி.. குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் அறிவிப்பு!

 
விபத்து

நேற்று நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நேருக்கு நேராக கார் ஒன்று பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த 12 பேரில் 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, கன்னியாகுமரியை நோக்கி பிரபல பிரபல ஆடல், பாடல் குழுவினர்கள் ஓட்டுநர் உட்பட 12 பேர், ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் நாகர்கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலையில் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில், கார் உருக்குலைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Accident

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

MKS

இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆற்தலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 நபர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web