குடை எடுத்திட்டு போங்க மக்களே...4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.. வெதர்மேன் எச்சரிக்கை!

 
இடி மின்னல் மழை

 தமிழகத்தில் தென்மேற்குபருவமழை காரணமாக தென்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று மாலை திடீரென மாறிய வானிலை சடசடவென மழையை கொட்டித் தீர்த்தது.  இந்நிலையில், இன்று மாலை சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வெதர்மேன்  பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக, அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து மழை பரவலாக பெய்து வருகிறது.  தமிழகத்தில்  சென்னையில்தான் வெயிலின் தாக்கம் அதிகம்.  பரவலான மழை காரணமாக சென்னையில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று மாலைஇடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது.

மழை
இந்நிலையில் இன்றும் மாலை மழை பெய்யலாம் என  வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் இன்று மாலை முதல் இரவு வரை  இடி, மின்னலுடன் மழை பெய்யும்” எனக் கூறியுள்ளார்.  சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இன்று முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web