அடுத்த அதிர்ச்சி... ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி! ​​​​​​​

 
ரஷ்யா

 வெளிநாடுகள் கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக சென்றிருக்கும் இந்தியர்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய மாணவர்கள் மர்ம முறையில் உயிரிழந்து வருவது தொடர்ந்து அதிர்ச்சியை அளித்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அதிர்ஷ்டவசமாக ஒரு மாணவர் காப்பாற்றப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.


 


ரஷ்யாவின் டிசெயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்திய தூதரகம், ரஷ்யாவில் நான்கு இந்திய மாணவர்கள் பரிதாபமாக ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்ததை உறுதிப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. 
ரஷ்யாவின் வோல்கோவ் ஆற்றின் கடற்கரையில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி ஒருவர் ஆற்றில் சிக்கியதாகவும், அவரது நான்கு நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றதாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவளைக் காப்பாற்றும் முயற்சியில் மேலும் மூவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்பி வைக்க ரஷ்ய அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து வருவதாகவும் தூதரக அதிகாரிகள் கூறினார்.
2 மாணவிகள், 2 மாணவர்கள் என  18 முதல் 20 வயதுடைய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரத்தில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது. ஒரே வகுப்பில் படித்து வரும் 5 பேர் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், இதில், ஒரு மாணவனை உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக இழுத்து காப்பாற்றி உள்ளனர். 
மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம், "உடல்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உயிரைக் காப்பாற்றிய மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
3 நண்பர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு ஒருவரையொருவர் கட்டித் தழுவிய இதயத்தை நொறுக்கும் தருணம் அவர்களது கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. 
உயிர் இழந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, சாத்தியமான அனைத்து உதவிகளுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் கூறுகையில், ஒரு மாணவியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேரின் உடல்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web