அதிகாலையில் தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி!

 
தீவிபத்து
 


டெல்லியில் இன்று அதிகாலையில்  ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த டெல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீவிபத்து
தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து பலத்த தீக்காயங்களுடன் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் 4 பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!