பால்கடையில் திடீர் தீவிபத்து... 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி!

 
தீவிபத்து

 மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் நயாபுராவில் குறிப்பிட்ட வளாகத்தில்  பால் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதே வளாகத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு திடீரென  அந்த வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வளாகத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.  

தீவிபத்து

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பெரும்  போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஆம்புலன்ஸ்

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மஞ்சு யாதவ் ” நயாபுராவில் உள்ள பால் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதே வளாகத்தில் ஒரு குடும்பம் வசித்து வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!