ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குத்திக் கொலை... ஏர் இந்தியா ஊழியர் அதிரடி கைது...!!

 
ஹசீனா

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், குடாச்சியில் வசித்துவ் வருபவர்   ஹசீனா.இவருக்கு வயது 46. இவரது கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். குடாச்சியில் ஹசீனா தனது   3 குழந்தைகள்மற்றும்  உறவினர் ஹாஜிராவுடனும்  வசித்து வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், ஹசீனா குடும்பத்தினரை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

ஏர் இந்தியா விமானம்


இந்த கொடூரத் தாக்குதலில் ஹசீனாவும்  அவரது  3 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். உறவினர் ஹாஜிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து  காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  அய்னாஸீடன் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூவாக பணிபுரிந்த   பிரவீன் அருண் கௌகுலே தான்  இந்த கொலைகளைச் செய்தது தெரிய வந்தது. 

கைது
அய்னாஸை அவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 4 பேரை பிரவீன் கொலை செய்தாரா அல்லது வேறு பிரச்சினை காரணமாக கொலை செய்தாரா என அவரைத் தேடி வந்தனர்.   தீவிர தேடுதலின் பேரில்  குடாச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரவீனை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை உடுப்பி நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.  அதற்கு முன்பாக அவரை தனியாக ஒரு இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web