4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்!

 
தமிழக அரசு

 தமிழகத்தில் ஜூன் 20 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.  இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.  

சட்டப்பேரவை

அந்தவகையில்  திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு  முன்வரைவை தாக்கல் செய்து இருந்தார். இந்த முன்வரைவு, இன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இது தவிர இன்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் இருந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

சட்டப்பேரவை

அத்துடன் ரூ10 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கள்ளச்சாராயத்தால் ஒரு உயிர் போனால் கூட அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளே பொறுப்பு என அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட கலெக்டர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web