பரபரப்பு... பசுவின் தலையை வெட்டி இந்து கோவிலில் வீசிய 4 பேர் !

 
கோவில்
 

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில்   இரட்டிலம் மாவட்டத்தில் இந்துக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிலின் பூசாரி அதிகாலை வேளையில் கோவில் வளாகத்தில் உள்ள நுழைவு வாயிலை திறந்துள்ளார்.அப்போது ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட பசுவின் தலை ஒன்று கோவில் வாசலில் கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி  உடனடியாக இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்.

பன்றிக்கு பால் கொடுத்த பசு
இந்தப் புகாரின்  பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  கோவிலில் வளாகத்தில் கிடந்த பசுவின் தலையை அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் பசுவின் தலையில் கோவிலுக்குள் வீசி சென்றது தெரியவந்தது.அவர்கள் 4 பேரையும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த காரணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இச்சம்பவத்துக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!