திருந்தவே மாட்டாங்களா?! வீட்டில் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது!

 
கள்ளச்சாராயம்


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே வீட்டில் சாராயம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் ஊறல் மற்றும் 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சாராய நடவடிக்கைகள் குறித்து போலீஸார் கடந்த சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில் சாராயம் காய்ச்சப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கள்ளச்சாராயம்

தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால் மேட்டுப்புதுார், சிபி நகரை சேர்ந்த மனோஜ் (30) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.மனோஜ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குட்டி முருகன் (44), செல்வராஜ் (53) மற்றும் அருண்குமார் (35) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஊரடங்கில் களைகட்டும் கள்ளச்சாராயம்!திருநெல்வேலியில் 5 பேர் கைது.!!

மேலும் மனோஜ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 லிட்டர் கள்ளச்சாராயம், 60 லிட்டர் சாராய ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாராயம் தயாரித்து நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web