நாளை தமிழகம் முழுவதும் 1126 திரையரங்குகளில் 4 காட்சிகள் ரத்து!

 
தியேட்டர்
மக்களவைத் தேர்தல் நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு  சினிமா  தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது என தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் தமிழக  அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் 4 காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1,126 திரையரங்குகளில்  4 காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்க உரிமையாளர்  சங்கத்தின் இணை செயலாளர்  தெரிவித்துள்ளார். 

 தமிழகத்தில் தேர்தல் ஜுரம். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

தியேட்டர்

அன்றைய தினம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் ஏப்ரல்  19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு
இந்தியா  முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல்19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அத்துடன்  விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில்  உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!