பள்ளியில் மாணவி திருமணம்... 4 மாணவர்கள் சஸ்பெண்ட்!

 
மாணவன் மாணவி

 கரூர் மாவட்டம் குளித்தலை  நாகனூர் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள்  தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். ஜூன் 29ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி சிறுமி அதிகாலையில் பார்த்த போது காணவில்லை. உடனடியாக அவரது பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சஸ்பெண்ட்
இது குறித்து தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மாணவியை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி சீருடையில் அச்சிறுமியை, பள்ளி சிறுவன் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. சிறுமியின் உறவினர்கள் திருமணம் செய்து கொண்ட மாணவன் மற்றும் உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  காவல் நிலையத்தில் புகார் விடுத்தனர்.சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமும் புகார் தெரிவித்தனர்.

வகுப்பறையில் தாலி மாணவி

அதில் , பள்ளி வளாகத்தில் திருமணம் செய்த சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைமை ஆசிரியர் இதுகுறித்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து  அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளியில் மாணவர்கள் திருமணம் செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திருமணம் செய்த மாணவர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை குழு பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகிறது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web