தமிழக மீனவா்கள் 4 போ் விடுதலை... ரூ50,000 அபராதம் விதிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து ஜூலை 22ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். அவா்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில், மன்னாா் நீதிமன்றத்தில் ராமேஸ்வரம் மீனவா்கள் 4 போ் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, ராமேஸ்வரம் மீனவா்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா். மீனவா்களுக்கு தலா ரூ. 50000 இலங்கைப் பணம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராதத் தொகையை உடனே கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், அபராதத் தொகையை உடனே கட்டாததால், மீனவா்கள் 4 பேரும் மீண்டும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
