4 யூடியூபர்கள் உடல் நசுங்கி ஒரே நேரத்தில் பலி... 2 கார்கள் நேருக்கு மோதியதில் பெரும் சோகம்!

 
4 யூடியூபர்கள்

 உத்திரப்பிரதேசம் மாநிலத்தில்  2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே நேரத்தில் 4 பிரபல யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 4 யூடியூபர்களும் ஒன்றாக சேர்ந்து நண்பரின் பிறந்தநாள் விழாவில்  கலந்து கொள்ளச் சென்றனர்.  ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், யூடியூப் டெவலப் செய்யும் முறைகள், பணிகள் என பேசிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விபத்து

இவர்கள்  லக்கி, சல்மான், ஷாருக், ஷாநவாஸ்  4 பேருமே இளைஞர்கள்.ஒன்றாக  காரில் வீடு திரும்பி கொண்டிருந்த  போது எதிரே வந்த கார் மீது அவர்களின் கார் மோதியது. இந்த கோர விபத்தில் 4  பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த 4 யூடியுபர்களும்  நகைச்சுவை சேனல் நடத்தி வரும் நிலையில் இவர்கள் உயிரிழந்த செய்தி அவர்களது ஃபாலோயர்கள் மத்தியில்   பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web