பத்திரம் மக்களே... மாலை 6 மணி வரை 40 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும்... மீண்டும் வெப்ப அலை!

 
வெப்ப அலை

 தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது .வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளதாக வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை

கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவின் பல மாநிலங்களில்  கோடை வெயில் உச்சம் தொட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை   நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத நிலை நிலவி வருகிறது. குறிப்பாக  மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது.  

வெயில்

சென்னையின் மிக  மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கலாம் என பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்கும் . வெயில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  42 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் எனவும்,  வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும்  தெரிவித்துள்ளார்.  சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என தெரிவித்துள்ளார்.  

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web