பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜினாமா ... பிரதமர் வருகையின் போது பரபரப்பு!

 
மோடி
 


 
மணிப்பூர் மாநிலத்தில்  40க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளன.  பிரதமர்  மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.  சுமார் 43 பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 13ல், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

மோடி

இதனைத்தொடர்ந்து, மிஸோரம் மாநிலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் செல்ல இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  மணிப்பூருக்கு பிரதமர் செல்லவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தின் புங்யார் தொகுதியில் 43 பாஜக நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மோடி


இருப்பினும் இதுகுறித்து கட்சி வட்டாரத்துக்குள் சில உறுப்பினர்கள் கூறுகையில், கட்சிக்குள் தற்போது நிலவும் விவகாரங்களால் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். கலந்தாலோசனை இல்லாதது, தலைமை மீதான மரியாதை குறித்து கவலை தெரிவித்ததுடன், இவைதான் ராஜிநாமா நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.  கட்சிக்கும் அதன் கொள்கைக்கும் மீதான எங்கள் விசுவாசம், எப்போதும் அசைக்க முடியாத ஒன்று. எங்கள் சமூகம் மற்றும் மணிப்பூர் மக்களின் நலனுக்காக பாடுபடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.  இருப்பினும், பாஜக நிர்வாகிகளின் ராஜினாமா குறித்து கட்சித் தலைமை இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?