தமிழகம் முழுவதிலும் இருந்து 4500 சிறப்பு பேருந்துகள்!!

 
அரசு பேருந்து

சித்ரா பௌர்ணமிக்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், உணவு, கழிப்பிட மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் வருவர். இங்கு மலையே சிவபெருமான வழிபடப்படுவதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை வலம் வருவதுண்டு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

அரசு பேருந்து

இவர்களின் தேவைகள் மற்றும் வசதிகளுக்காக தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிறப்பு பேருந்துகள் குறித்து  போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சித்ரா பவுர்ணமியில் மலையை வலம் வருவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்கூடுதலாக 1000 பேருந்துகளும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் 1,500 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.  பயணிகளின் தேவைகளை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் வழக்கமான பேருந்துகளுடன் திருவண்ணாமலைக்கு 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, தஞ்சாவூர், தருமபுரி, ஓசூர்,திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உட்பட நகரங்களில் இருந்தும் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web