46,534 அரசு பணியிடங்கள் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 
சட்டப்பேரவை

 

தமிழகத்தில் காலியாக உள்ள 46,534 அரசு பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரிக்கு நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110-விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

சட்டப்பேரவை

அப்போது பேசிய அவர், “ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும்.  அதேபோல 17,591 காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். காலியாக இருக்கும் பிற பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம் 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இவ்வாறு நிரப்பப்படும்’’ என்று அறிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!