ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் கொள்ளை... 3 பேர் கைது!

 
நகைக் கொள்ளை

 ஈரோடு மாவட்டத்தில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் கொள்ளை போன வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 பவுன் நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டரான இவர் கடந்த மாதம் 8-ம் தேதியன்று, தேனியில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அன்று இரவு, ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 235 பவுன் நகை மற்றும் ரூ.48 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நகைக் கொள்ளை

மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதிக்கு ஒரு கார் வந்து சென்றதைக் கண்டறிந்தனர். மேலும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவருக்கு இந்தக் கொள்ளையில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

போலீஸ்
இந்நிலையில், ஆடிட்டர் சுப்பிரமணியனின் கார் ஓட்டுநரான சத்யன் (34), திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய போலீசார் சத்யனைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இவருடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், திருமலை நகரைச் சேர்ந்த அருண்குமார் (36), வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) ஆகியோரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அருண்குமார், விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார்  கைது செய்தனர்.கைதானவர்களிடமிருந்து 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மற்றும் கொள்ளை அடிக்கப் பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web