600க்கு 494.. குறைந்த மதிப்பெண்ணால் மாணவன் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!

 
ஜெயவர்மன்

தேனி மாவட்டம், மணி நகர் கம்பம் கிளப் சாலையில் வசிக்கும் கண்ணன் மகன் ஜெயவர்மன் (வயது 17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த 12வது பொதுத்தேர்வில் 600க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது, மாணவன் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக வீட்டில்  இல்லாததால், மாணவனை உறவினர்கள் தேடியபோது, மாடியில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தூக்கில் தொங்கிய மாணவன் பிரேதப் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மதிப்பெண்கள் வெளியான கடந்த இரண்டு நாட்களாக நான் நினைத்தபடி மதிப்பெண்கள் கிடைக்காததால் வருத்தம் அடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கு மேல் மதிப்பெண் பெறுவார் என நினைத்த அவர், 500க்கு மேல் எடுக்க முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web