நாளை இந்தியா முழுவதும் 96 தொகுதிகளில் 4ம் கட்ட வாக்குப்பதிவு!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

 இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது வரை 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.  இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட  102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. ஏப்ரல் 26ம் தேதி 88 தொகுதிகளில்  2ம் கட்ட வாக்குப்பதிவில்  66.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி நடைபெற்ற தேர்தலில்  65.68 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நாளை மே 13ம் தேதி திங்கட்கிழமை 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.  

தேர்தல் ஆணையம்

ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட  96 தொகுதிகளில் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்   வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  ஆந்திராவைப் பொறுத்தவரை 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

 மணிப்பூர் லோக்சபா தேர்தல்

இதில் ஆந்திர முதல்வர்   ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்தலா தொகுதியிலும்,  சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதே போல்  ஒடிசா மாநில சட்டசபைக்கும் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒடிசாவில் மொத்தம் 147 தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web