5 மாவட்டங்களில் மிதமான மழை... குடை எடுத்திட்டு போங்க.!

 
மழை

 தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.ஜூலை 10 முதல் 14ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை,  இரவு வேளைகளில்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியசும் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெயில் மழை
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web