லடாக்கில் திடீர் வெள்ளத்தில் மூழ்கி 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு... ராஜ்நாத் சிங் இரங்கல்!

 
லடாக்
 

 

கடந்த சில நாட்களாகவே லடாக்கில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திடீரென வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நகரையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், லடாக்கில் நான்லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே டேங்க் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களின் டி -72 டேங்க் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ராஜ்நாத்சிங்


இன்று அதிகாலை லடாக்கின் லே பகுதியில் இருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர்க்கு அருகிலுள்ள நியோமா-சுஷுல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஒரு ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) மற்றும் நான்கு ஜவான்கள் உட்பட ஐந்து வீரர்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த டி-72 டேங்க் , ஆற்றைக் கடக்க முயன்ற போது அதிகாலை 1 மணியளவில் திடீர் வெள்ளத்தை எதிர்கொண்டது. திடீரென நீர் பெருகியதால், ராணுவ டேங்க் முழுவதுமாக வேகமாக நீரில் மூழ்கியது. 


"ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வீரர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது" என்று பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து தெரிவித்தனர். காணாமல் போன வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர். 
இத்தகைய கரடுமுரடான நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள வீரர்கள் எதிர்நோக்கும் கணிக்க முடியாத மற்றும் சவாலான நிலைமைகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்தச் செய்தி இராணுவ சமூகம் மற்றும் பிராந்தியம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இந்த துயரமான வளர்ச்சிக்கு மத்தியில் தனது பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.“லடாக்கில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம். தேசத்திற்கு நமது துணிச்சலான வீரர்களின் முன்மாதிரியான சேவையை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web