காலையிலேயே அதிர்ச்சி... கிணற்றில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தினர் 5 பேர் உயிரிழப்பு!

 
கிணறு

சத்தீஸ்கர் மாநித்தில் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் இருந்து வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்ததில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் ராம்சந்திர ஜெய்ஸ்வால், ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திரா படேல் மற்றும் திகேஷ்வர் சந்திரா என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை ஆய்வாளர் சஞ்சீவ் சுக்லா தெரிவித்தார்.

கிணறு

இது குறித்து போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, ஜெய்ஸ்வால் கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுக்க கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அவர் மயக்கமடைந்த போது, ​​​​அவரது குடும்ப உறுப்பினர் உதவிக்காக கூச்சலிட்டபோது, படேல் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கிணற்றுக்குள் சென்றுள்ளனர்.

போலீஸ்


பின்னர் நால்வரும் வெளியே வராத நிலையில், சந்திரா கிணற்றுக்குள் இறங்கி சென்றுள்ளார். ஆனால் அவரும் மயக்கமடைந்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள் காவல்துறையில் இந்த சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்தனர்.கிணற்றிலிருந்து உடல்களை மீட்பதற்காக மாநில பேரிடர் மீட்புப் படைகளின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுக்லா கூறினார். கிணற்றுக்குள் விஷவாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web