லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

 
விபத்து

 கேரள மாநிலம், கண்ணூரில் காஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். 

விபத்து

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருக்குன்னு புன்னச்சேரியில் அருகே காரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களது கார், முன்னே சென்று கொண்டிருந்த சிலிண்டர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியதில் விபத்து நடந்துள்ளது. மோதிய வேகத்தில் காரில் பயணித்த 5 பேருமே சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வேகமாக லாரி மீது மோதியதால், கார் அப்பளமாய் நொறுங்கியது. காரை உடைத்து உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுத்தனர். பின்னர், சடலங்களை மீட்டு பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 5 பேரும் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!