சூப்பர்... தமிழகத்திற்கு 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்!

 
பெண் மருத்துவர்
 

தேசிய மருத்துவ ஆணையம் இந்தியா முழுவதும் 113  புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியாவிலேயே  அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 22 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர  மாநிலத்தில் 14 கல்லூரிகள், தமிழகத்தில்  5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர்


இந்த உத்தரவின்படி  கன்னியாகுமரி, சென்னை அவனம்பட்டு, காஞ்சிபுரத்தில்  ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர் மாவட்டத்தில்  கிருஷ்ணன் கோவில்,  திண்டிவனத்தில்  ஓங்கூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தனியார் சார்பில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே  தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவலின்படி மொத்தம் 58 கல்லூரிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web